தமிழ் ஏற்ற இறக்கம் யின் அர்த்தம்

ஏற்ற இறக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (அதிகரிக்க அல்லது குறையச் சாத்தியம் உள்ளவற்றில் ஒன்று) சில சமயம் உயர்ந்தும் சில சமயம் தாழ்ந்தும் காணப்படும் போக்கு.

    ‘மேடைப் பேச்சாளர்கள் குரலில் ஏற்ற இறக்கத்தோடு பேசுகிறார்கள்’
    ‘பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டும் வரைபடம்’
    ‘மின்னழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் கணிப்பொறிகள், தொலைக்காட்சிப் பெட்டிகளெல்லாம் பாதிப்படைகின்றன’