தமிழ் ஏறி இறங்கு யின் அர்த்தம்

ஏறி இறங்கு

வினைச்சொல்இறங்க, இறங்கி

  • 1

    (ஒன்றைத் தேடிப் பல இடங்களுக்கும்) அலைதல்.

    ‘பல கடைகளில் ஏறி இறங்கியும் நீ கேட்ட மருந்து கிடைக்கவில்லை’
    ‘அவன் ஏறி இறங்காத அலுவலகம் இல்லை. அப்படியும் வேலை கிடைக்கவில்லை’