தமிழ் ஏலம் யின் அர்த்தம்

ஏலம்

பெயர்ச்சொல்

 • 1

  பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் அதிகபட்ச விலைக்குப் பொருளைக் கேட்போருக்கு விற்கும் விற்பனை முறை/வணிக ரீதியில் ஒரு பொறுப்பை லாபகரமான முறையில் நிறைவேற்றுவதற்கான உரிமையை ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கும் முறை.

  ‘அடகுவைத்த தங்க நகைகள் ஏலம்’
  ‘நவீன ஓவியங்கள் ஏலத்தில் விரும்பி வாங்கப்படுகின்றன’
  ‘உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக நடைபெற்ற ஏலத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகத் தொகை கிடைத்தது’
  ‘புதிய மேம்பாலம் கட்டுவதற்கான ஏலம் குறைந்தபட்சத் தொகையைக் கேட்பவர்களுக்கே தரப்படும்’

தமிழ் ஏலம் யின் அர்த்தம்

ஏலம்

பெயர்ச்சொல்

 • 1

  (உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படுவதும் மருந்தாகப் பயன்படுவதுமான) நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்/அந்தக் காயைத் தரும் செடி.