தமிழ் ஏழை யின் அர்த்தம்

ஏழை

பெயர்ச்சொல்

 • 1

  வறுமையில் இருப்பவர்.

  ‘அவன் ஒரு பரம ஏழை. அவனால் இவ்வளவு பணம் கொடுக்க முடியாது’
  ‘ஏழையால் யாரை எதிர்க்க முடியும்?’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) போதிய பொருள் வசதி இல்லாத நிலை.

  ‘ஏழை மக்கள்’
  ‘ஏழை நாடுகள்’