தமிழ் ஏவு யின் அர்த்தம்

ஏவு

வினைச்சொல்ஏவ, ஏவி

 • 1

  (தாக்குவதற்காக ஒருவரை அல்லது ஒரு விலங்கை) தூண்டுதல்.

  ‘குண்டர்களை ஏவி அவர் எங்களைப் பயமுறுத்தினார்’
  ‘திருடர்கள் மீது அவர் நாயை ஏவிவிட்டார்’

 • 2

  (வன்முறை, அடக்குமுறை முதலியவற்றை) கட்டவிழ்த்துவிடுதல்.

  ‘அடக்குமுறையை ஏவிவிட்டு மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியாது’

 • 3

  (வேலை செய்யும்படி) கட்டளையிடுதல்; பணித்தல்.

  ‘நான் போன நேரம் அவர் வேலைக்காரர்களை ஏவிக்கொண்டிருந்தார்’
  ‘‘என்னை ஏவுவதற்கு நீ யார்?’ என்று அவர் கேட்டார்’

 • 4

  (ஏவுகணை முதலியவற்றை ஓர் இலக்கு நோக்கி) அனுப்புதல்; செலுத்துதல்.

  ‘ஏவுகணைகளை ஏவிப் பலத்த சேதம் விளைவித்த போர் இது’