தமிழ் ஐக்கியம் யின் அர்த்தம்

ஐக்கியம்

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட அடையாளத்தைக் கொண்டவை தனித்தனியானவை என்ற வேற்றுமை மறைந்து ஒன்றுவதால் ஏற்படும் நிலை; ஒன்று மற்றொன்றில் அடக்கம்.

  ‘அவருடைய எழுத்தாற்றல் நம்மைக் கதையுடன் ஐக்கியம் அடையச் செய்கிறது’
  ‘மலைவாழ் மக்களுடன் பழகி, உண்டு, உறங்கி அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டார்’

 • 2

  ஒற்றுமை.

  ‘தொழிலாளர்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் முயற்சி தோற்றது’

 • 3

  (பெரும்பாலும் பெயரடையாக) ஒன்றாக இணைந்திருப்பது.

  ‘ஐக்கிய அரபு நாடுகள்’
  ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’