தமிழ் ஐயகோ யின் அர்த்தம்

ஐயகோ

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒன்றின் நிலையைக் கண்டு இரக்கம், துயரம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘கறையானால் அரிக்கப்பட்டு அழிந்த ஏடுகள் ஐயகோ எத்தனை, எத்தனை!’
    ‘ஐயகோ! என் சொந்த நாட்டிலேயே அந்நியனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டேனே!’