தமிழ் ஐயா யின் அர்த்தம்

ஐயா

பெயர்ச்சொல்

 • 1

  ஆண்களில் வயதில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு மரியாதைச் சொல்.

  ‘ஐயா, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?’
  ‘ஐயா, நீங்கள்தான் இதற்கு ஆவனசெய்ய வேண்டும்’

 • 2

  பேச்சு வழக்கு மதிப்புடையதாகக் கருதப்படும் சில தொழில்களைக் குறிக்கும் பெயர்ச்சொற்களுடன் ‘ஆண்’ என்பதை உணர்த்துவதற்கும் மரியாதையைக் காட்டுவதற்கும் இணைக்கப்படும் சொல்.

  ‘வக்கீல் ஐயா’
  ‘கலெக்டர் ஐயா’

 • 3

  வட்டார வழக்கு தந்தை அல்லது தந்தையின் தந்தை.

  ‘சின்னப் பையனாக இருக்கும்போது ஐயாவோடு சந்தைக்குச் சென்றிருக்கிறேன்’