தமிழ் ஐயோ யின் அர்த்தம்

ஐயோ

இடைச்சொல்

  • 1

    ஒருவர் தன்னுடைய வலி, துக்கம், இரக்கம் முதலியவற்றைத் தெரிவிப்பதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘ஐயோ, தலைவலி உயிர்போகிறதே!’
    ‘ஐயோ! எங்களையெல்லாம் இப்படி அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே?’
    ‘ஐயோ, அவனுக்கு இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா?’