தமிழ் ஒ யின் அர்த்தம்

வினைச்சொல்ஒக்க, ஒத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒன்று மற்றொன்றை) போல இருத்தல்; (ஒன்று மற்றொன்றுக்கு) சமமாக இருத்தல்.

  ‘வாழ்க்கை என்பது பயணத்தை ஒத்தது’
  ‘ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்பார்கள்’

 • 2

  உயர் வழக்கு பொருந்துதல்; ஏற்றவாறு இருத்தல்; உகந்ததாக இருத்தல்.

  ‘அந்த அரசின் நடவடிக்கைகள் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஒத்ததாக இல்லை’
  ‘மனம் ஒத்து வாழுங்கள்!’

 • 3

  உயர் வழக்கு ஒன்றுபோலிருத்தல்.

  ‘அவர் உள்ளும் புறமும் ஒத்தவர்’