தமிழ் ஒட்ட யின் அர்த்தம்

ஒட்ட

வினையடை

 • 1

  (அகற்றுதல், நீக்குதல் தொடர்பாக வரும்போது) முற்றிலும்; முழுமையாக.

  ‘பாலை ஒட்டக் கறந்துவிடாதே; கன்றுக்குக் கொஞ்சம் விடு!’
  ‘அந்த நினைவை ஒட்டத் துடைத்தெறி!’

 • 2

  (‘வெட்டு’ போன்ற வினையோடு வரும்போது) (அடிப் பகுதியைத் தொடும்படியாக) மிகவும் குட்டையாக.

  ‘முடியை ஒட்ட வெட்டிக்கொண்டால்தான் அப்பாவுக்குப் பிடிக்கும்’

தமிழ் ஒட்ட யின் அர்த்தம்

ஒட்ட

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் உடையைக் குறிக்கும்போது) இறுக்கமாக.

  ‘ஏன் இப்படிச் சட்டையை ஒட்டப் போட்டுக்கொண்டிருக்கிறாய்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நெருக்கமாக.

  ‘இந்தப் பகுதியில் வீடுகளெல்லாம் ஒட்டஒட்ட இருக்கின்றன’