தமிழ் ஒட்டிய யின் அர்த்தம்

ஒட்டிய

பெயரடை

 • 1

  (குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற; (காலத்தில்) முன்னோ பின்னோ வருகிற.

  ‘ரயில் பாதையை ஒட்டிய சாலையில் நடந்தோம்’
  ‘கடற்கரையை ஒட்டிய பகுதியில் குப்பை எதுவும் கொட்டக் கூடாது’
  ‘தீபாவளியை ஒட்டிய நாட்களில் விடுமுறை கேட்காதீர்கள்’

 • 2

  சம்பந்தப்பட்ட.

  ‘இந்த ஊரும் இதை ஒட்டிய என் இளமைக் கால நினைவுகளும் மறக்க முடியாதவை’

 • 3

  நெருங்கிய.

  ‘ஒட்டிய உறவு என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை’