தமிழ் ஒட்டுமொத்தம் யின் அர்த்தம்

ஒட்டுமொத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தனித்தனியாகக் குறிப்பிடாமல் தொகுத்துக் கூறும்போது) பலவற்றின் தொகுப்பு.

  ‘எல்லாக் கலைஞர்களையும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிப் பேசினார்’
  ‘பறவைகளின் ஒட்டுமொத்தமான இரைச்சல்’

 • 2

  தனித்தனியாக இருப்பவற்றின் கூட்டு.

  ‘தொழில் திட்டங்களில் ஒட்டுமொத்த முதலீடு எழுநூறு கோடி ரூபாய்’
  ‘அவருடைய சாதனைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும்’
  ‘இந்திய அணி இந்தத் தொடரில் பெற்ற ஒட்டுமொத்தப் புள்ளிகள் 15 ஆகும்’
  ‘ஒட்டுமொத்தத்தில் வியாபாரத்தில் மிஞ்சியது பத்தாயிரம் ரூபாய்தான்’

 • 3

  (ஒன்றுவிடாமல்) எல்லாம்; அனைத்தும்; முழுவதும்.

  ‘தெருவில் இருந்த குடிசைகள் தீ விபத்தில் ஒட்டுமொத்தமாக எரிந்துபோயின’