ஒடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒடி1ஒடி2

ஒடி1

வினைச்சொல்ஒடிய, ஒடிந்து, ஒடிக்க, ஒடித்து

 • 1

  (கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்கள்) இரண்டாக முறிதல்; (மரக் கிளை போன்றவை) இணைந்திருக்கும் நிலையிலிருந்து பிரிதல்; உடைதல்.

  ‘புயலில் பெரிய மரக் கிளைகள் ஒடிந்து விழுந்தன. சிறிய கொம்புகள் ஒடிந்து தொங்குகின்றன’
  ‘மரத்திலிருந்து கீழே விழுந்து கை ஒடிந்துவிட்டது’

 • 2

  (மனம்) செயலிழத்தல்.

  ‘மரணச் செய்தியால் மனமொடிந்துநிற்கிறான்’

ஒடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒடி1ஒடி2

ஒடி2

வினைச்சொல்ஒடிய, ஒடிந்து, ஒடிக்க, ஒடித்து

 • 1

  (கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்களை) துண்டாகுமாறு உடைத்தல்; (மரக் கிளை போன்றவற்றை) இணைந்திருக்கும் இடத்திலிருந்து முறித்தல்.

  ‘கரும்பைக் கால் முட்டியில் வைத்து ஒடித்தான்’
  ‘ஆடு முன்னங்கால்களை மரத்தில் வைத்துக் கொம்பை ஒடித்து இழுக்கிறது’

 • 2

  (ஒடிப்பது போல்) வளைத்துத் திருப்புதல்.

  ‘கழுத்தை ஒடித்துப் பார்த்தான்’
  ‘குறுக்கே ஓடிவந்த குழந்தையைக் காப்பாற்ற வண்டியை ஒடித்ததில் சைக்கிளிலிருந்து விழுந்தான்’