தமிழ் ஒடுக்கு யின் அர்த்தம்

ஒடுக்கு

வினைச்சொல்ஒடுக்க, ஒடுக்கி

 • 1

  (கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்.

  ‘பயங்கரவாதிகளை ஒடுக்க ராணுவம் அனுப்பப்படுகிறது’

 • 2

  (உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல்.

  ‘பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கத்தான் இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறதா?’

 • 3

  (எண்ணிக்கையை அல்லது ஒன்றின் தீவிரத்தை மிக) குறைந்த அளவிற்குக் கொண்டுவருதல்; குறைத்தல்.

  ‘வரி ஏய்ப்பை ஒடுக்குவதில் ஓரளவு வெற்றி’
  ‘வர்த்தகப் போட்டியை ஒரேயடியாக ஒடுக்கிவிடக் கூடாது’

 • 4

  (கைகால் முதலியவற்றைச் சுருக்கி உடம்பை) குறுக்குதல்.

  ‘உடம்பை ஒடுக்கிக்கொண்டுதான் கூட்டத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது’

தமிழ் ஒடுக்கு யின் அர்த்தம்

ஒடுக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பாத்திரத்தில் ஏற்படும்) நெளிவு.

  ‘குடத்தின் அடியில் ஒடுக்கு விழுந்திருப்பதால் கீழே வைத்தால் ஒரு பக்கமாகச் சாய்கிறது’