தமிழ் ஒடுங்கு யின் அர்த்தம்

ஒடுங்கு

வினைச்சொல்ஒடுங்க, ஒடுங்கி

 • 1

  (ஒன்று அதிகமாக அல்லது முனைப்பாக இருந்த நிலையிலிருந்து) குறைதல்; (மூச்சு) குறைந்து உள்ளடங்குதல்.

  ‘மேலதிகாரியைக் கண்டதும் அவர்களின் கலகலப்பு ஒடுங்கிவிட்டது’
  ‘கடலின் ஆரவாரம் ஒடுங்கிக் கேட்டது’
  ‘மரணப் படுக்கையில் இருந்தவரின் மூச்சு ஒடுங்கத் தொடங்கியது’

 • 2

  (ஒரு நிலைக்குள் அல்லது நிலையில்) வந்து சேர்தல்; அடைபடுதல்; அடங்குதல்.

  ‘பறவைகள் கூட்டில் ஒடுங்கின’