தமிழ் ஒண்டி யின் அர்த்தம்

ஒண்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (துணை இல்லாமல்) தனி; ஒற்றை.

  ‘வீட்டில் மனைவி ஒண்டியாக இருப்பாளே என்ற நினைவு வந்தது’
  ‘இந்த ராத்திரியில் எங்கே ஒண்டியாக வெளியே போகிறீர்கள்?’
  ‘நான் ஒண்டி ஆள்; அவர்களை என்ன செய்ய முடியும்?’

 • 2

  பேச்சு வழக்கு துணை யாரும் இல்லாமல் தனியாக வாழ்பவர்.

  ‘நான் ஒண்டிதானே, எனக்கு இந்த அறையே போதும்’