தமிழ் ஒண்டு யின் அர்த்தம்

ஒண்டு

வினைச்சொல்ஒண்ட, ஒண்டி

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின் அருகில் போய்ப் பாதுகாப்புக்காக) ஒட்டினாற்போல் இருத்தல்; ஒதுங்குதல்.

  ‘அப்பா அடிப்பார் என்று பயந்து குழந்தை அம்மாவிடம் போய் ஒண்டிக்கொண்டது’
  ‘மழையில் நனையாமல் சுவரோடு சுவராக ஒண்டி நின்றுகொண்டிருந்தாள்’
  ‘மழைக்கு ஒண்டக்கூட இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு இடம் கிடையாது’
  ‘ஒண்ட இடமின்றி வாடும் ஏழைகள்’