தமிழ் ஒத்த யின் அர்த்தம்

ஒத்த

பெயரடை

 • 1

  (வெவ்வேறாக இருப்பவர்களில் அல்லது இருப்பனவற்றில்) பொதுத் தன்மை கொண்ட.

  ‘சென்னையை ஒத்த நகரங்களில் மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகிவருகிறது’
  ‘ஒத்த கருத்துகளை உடையவர்கள் இணைந்து செயலாற்றுவது எளிது’
  ‘என்னுடைய பெற்றோரைப் போல் மனம் ஒத்த தம்பதிகளைக் காண்பது கடினம்’
  ‘ஒத்த அமைப்பையும் செயலையும் கொண்ட செல் தொகுதிக்குத் திசு என்று பெயர்’

 • 2

  (காலத்தைக் குறிக்கையில்) ஒரே.

  ‘பெண்ணின் திருமணமும் இடமாற்றமும் ஒத்த நேரத்திலா வர வேண்டும்?’