தமிழ் ஒத்திப்போடு யின் அர்த்தம்

ஒத்திப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

 • 1

  (ஒரு செயலை, பணியைச் செய்ய வேண்டிய நாளில் அல்லது நேரத்தில் செய்யாமல்) தள்ளிப்போடுதல்.

  ‘ஊருக்குப் போவதை ஒத்திப்போட முடியாதா?’
  ‘தேர்வு ஒத்திப்போடப்படலாம்’
  ‘மகள் திருமணத்தைத் தை மாதம்வரை ஒத்திப்போட்டிருக்கிறேன்’

 • 2

  (ஒரு செயல்) பின்னொரு நாளில் நிகழும்படியாகச் செயல்படுதல்.

  ‘அடுத்த குழந்தையை இரண்டாண்டுகளுக்கு ஒத்திப்போடுவது நல்லது என்று மருத்துவர் கூறினார்’
  ‘நவீன மருத்துவம் இறப்பை ஒத்திப்போடுவதில் வெற்றிகண்டிருக்கிறது’

 • 3

  காண்க: ஒத்திவை