தமிழ் ஒத்திரு யின் அர்த்தம்

ஒத்திரு

வினைச்சொல்-இருக்க, -இருந்து

  • 1

    (இருவர் அல்லது இரண்டாக இருப்பவை ஏதேனும் ஓர் அம்சத்தில்) ஒன்றுபோல் இருத்தல்.

    ‘பிடிவாதத்தில் நீ உன் அப்பாவை ஒத்திருக்கிறாய்’
    ‘மாதிரிக் கையெழுத்தோடு ஒத்திருந்தால்தான் காசோலை செல்லும்’