தமிழ் ஒத்திவைப்புத் தீர்மானம் யின் அர்த்தம்

ஒத்திவைப்புத் தீர்மானம்

பெயர்ச்சொல்

  • 1

    முக்கியமான பொதுப் பிரச்சினை ஒன்றை விவாதிக்கும் பொருட்டு பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் அவையின் அன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் தீர்மானம்.

    ‘வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தைக் குறித்து விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் முன்வைத்தார்’
    ‘தேர்வுக் குளறுபடிகளை விவாதிக்கப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது’