தமிழ் ஒத்துக்கொள் யின் அர்த்தம்

ஒத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (ஒருவருடைய செயல், கருத்து முதலியவற்றைச் சரி என்று மற்றவர்) ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘நான் சொல்வதையெல்லாம் நீ ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை’

 • 2

  (ஒரு தவறான செயலுக்கு ஒருவர் காரணமாக இருந்தது வெளிப்படும்போது அவர் அதற்கான) பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்; ஒப்புக்கொள்ளுதல்.

  ‘முதலில் நீ செய்தது தவறு என்பதை ஒத்துக்கொள்!’
  ‘தான் பணத்தைத் திருடியதாக ஒத்துக்கொண்டான்’

 • 3

  சம்மதித்தல்.

  ‘ஒருவழியாக நண்பன் திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டான்’
  ‘நீ ஒத்துக் கொண்டால் மட்டுமே இந்த வீட்டை விற்பேன்’

 • 4

  (உணவு, நீர் முதலியவை ஒருவருடைய உடல்நலத்திற்கு) ஏற்றதாக இருத்தல்; பொருந்துதல்.

  ‘எண்ணெய்ப் பண்டம் அவளுக்கு ஒத்துக்கொள்ளாது’
  ‘மலைக் காற்று அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை’

 • 5

  (பெரும்பாலும் எதிர்மறையில்) ஒத்துப்போதல்.

  ‘உங்கள் இருவருக்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விலகிவிட வேண்டியதுதானே’