தமிழ் ஒத்துப்பாடு யின் அர்த்தம்

ஒத்துப்பாடு

வினைச்சொல்-பாட, -பாடி

  • 1

    (எரிச்சலான அல்லது கேலியான தொனியில் கூறும்போது) (அந்தஸ்து, அதிகாரம் போன்றவற்றில் மேல்நிலையில் உள்ள ஒருவர் செய்வது அல்லது சொல்வது உண்மையில் சரிதானா என்று ஆராயாமல்) சரியென ஆமோதித்தல்.

    ‘‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று அதிகாரியைச் சுற்றியிருந்தவர்கள் ஒத்துப்பாடினார்கள்’
    ‘தனக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சொல்வதற்கெல்லாம் அவர் ஒத்துப்பாடிக்கொண்டிருக்கிறார்’