தமிழ் ஒதுங்கு யின் அர்த்தம்

ஒதுங்கு

வினைச்சொல்ஒதுங்க, ஒதுங்கி

 • 1

  (இடத்திலிருந்து அகலுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (இருந்த இடத்திலிருந்து) அகலுதல்; விலகுதல்

   ‘அதிகாரியைக் கண்டதும் ஒதுங்கி வழிவிடுவது வழக்கமாகிவிட்டது’
   ‘நான் என்ன வேண்டாதவனா, எல்லோரும் ஒதுங்கிப்போகிறீர்கள்?’
   ‘ஊரிலிருந்து ஒதுங்கிய இடத்தில் வீடு’
   ‘அடிதடி நடப்பதைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்த வீட்டுத் திண்ணையில் ஒதுங்கிக்கொண்டான்’

  2. 1.2 (தனிமைப்படுத்திக்கொள்ளும் விதத்தில்) தனித்திருத்தல்; விலகியிருத்தல்

   ‘இவ்வளவு காலம் ஒதுங்கியிருந்துவிட்டு இப்போது பணம் கிடைக்கிறது என்று தெரிந்ததும் தலைகாட்டுவது நியாயமா?’
   ‘நிர்வாகக் குழுவின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்காததால் நான் ஒதுங்கிக்கொண்டேன்’
   ‘தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால் வியாபாரத்திலிருந்து ஒதுங்கிக்கொள்வதாகக் கூட்டாளியிடம் சொன்னேன்’

 • 2

  (ஒரு பக்கத்திற்கு வந்துசேர்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஆடை முதலியன அதற்கு உரிய இடத்தில் இருக்காமல்) ஒரு பக்கமாகக் கிடத்தல்; விலகுதல்

   ‘கீழே விழுந்து கிடந்தவரின் வேட்டி ஒதுங்கியிருந்தது’

  2. 2.2 (நீர்நிலையில் மிதக்கும் பொருள்கள், மீன்கள் போன்றவை) கரையோரம் வந்து சேர்தல்

   ‘இறந்த கடலாமைகள் கரையில் ஒதுங்கின’

  3. 2.3 மாதவிலக்கு ஏற்படுதல்

  4. 2.4 (இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ள) தனிமையான இடத்திற்குப் போதல்

   ‘இந்த ஊரில் அவசரத்திற்கு ஒதுங்கக் கூட இடமில்லை’