தமிழ் ஒத்திகை யின் அர்த்தம்

ஒத்திகை

பெயர்ச்சொல்

 • 1

  (நாடகம், இசைக் கச்சேரி, தேர்வு போன்றவற்றை நிகழ்த்துவதற்கு முன் அதை நடத்தி) சரிபார்க்கும் பயிற்சி.

  ‘ஒத்திகையின்போது நன்றாக நடிக்கும் நீ மேடையில் ஏன் தடுமாறுகிறாய்?’
  ‘நேர்முகத் தேர்வில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற ஒத்திகை மனத்துக்குள் நடந்தது’

 • 2

  பின்னால் நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சியை முன்னதாக நிகழ்த்திப்பார்க்கும் செயல்.

  ‘இந்த இடைத்தேர்தல் வரப்போகும் பொதுத்தேர்தலுக்கான ஒத்திகையே!’
  ‘இந்திய விமானப் படை பல்வேறு வகையான ஏவுகணைகளைச் செலுத்தி ஒத்திகை நடத்தவிருக்கிறது’