ஒன்றுசேர்1
வினைச்சொல்
- 1
பலர் அல்லது பல கூடுதல்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடித்த திரைப்படம் இது’‘நரிகள் ஒன்றுசேர்ந்து ஊளையிட்டன’ - 2
ஒற்றுமைப்படுதல்.
‘அவர்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு இல்லை’‘நாம் ஒன்றுசேர்வதைத் தடுக்கவே இந்தத் திட்டம்!’
ஒன்றுசேர்2
வினைச்சொல்
- 1
(பலரை அல்லது பலவற்றை) ஒரே இடத்தில் அல்லது ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல்.
‘போராட்டத்தின் முதல் கட்டமாக மக்களை ஒன்றுசேர்க்க வேண்டும்’‘அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒன்று சேர்த்து இசைவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்’‘பல்வேறு ஆசிரியர் சங்கங்களையும் நம் இயக்கத்தில் ஒன்றுசேர்க்க வேண்டும்’