தமிழ் ஒன்றுமட்டும் யின் அர்த்தம்

ஒன்றுமட்டும்

இடைச்சொல்

  • 1

    நிச்சயம் என்று ஒருவர் கருதுவதை வலியுறுத்தப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘ஒன்றுமட்டும் தெரிகிறது; அவள் ஏதோ கஷ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாள்’
    ‘ஒன்றுமட்டும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்கத் தயங்கக் கூடாது’