தமிழ் ஒன்றும்பாதியுமாக யின் அர்த்தம்

ஒன்றும்பாதியுமாக

வினையடை

  • 1

    (தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றைக் குறிக்கும்போது) ஒன்றிரண்டாக.

    ‘சட்னிக்குப் பொட்டுக்கடலையை ஒன்றும்பாதியுமாக அரைத்துக்கொள்’

  • 2

    (வேலையைக் குறித்து வரும்போது) சரியான முறையில் இல்லாமல்; அரைகுறையாக.

    ‘உன்னை நம்பி இந்த வேலையைக் கொடுத்தேன். இப்படி ஒன்றும்பாதியுமாகச் செய்தால் என்ன செய்வது?’