ஒன்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒன்று1ஒன்று2

ஒன்று1

வினைச்சொல்ஒன்ற, ஒன்றி

 • 1

  இரண்டும் வெவ்வேறு என்று சொல்ல முடியாதபடி இணைதல்; ஐக்கியமாதல்.

  ‘நடிகர்கள் தாங்கள் ஏற்ற பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார்கள்’
  ‘மலைப்பகுதியில் வாழ்கிற மக்கள் இயற்கைச் சூழலோடு ஒன்றியவர்கள்’

 • 2

  தன்னை மறந்து ஈடுபடுதல்; லயித்தல்.

  ‘கண்ணை மூடி இசையில் ஒன்றிவிட்டார்’

ஒன்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒன்று1ஒன்று2

ஒன்று2

பெயர்ச்சொல்

 • 1

  முதல் முழு எண்.

 • 2

  (குறிப்பிடப்படும்) ஒரு பொருள்; ஒரு தன்மை; ஒரு விஷயம்.

  ‘பழத்தில் ஒன்றை எடுத்து எனக்குக் கொடுத்தார்’
  ‘பணிவு என்ற ஒன்று உண்டு தெரியுமா?’
  ‘அவரிடம் ஒன்று கேட்க வேண்டும்’

 • 3

  தனித்தனியாகக் கருதப்படுவது.

  ‘நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் கூலி’

 • 4

  வேறுபாடு இல்லாத நிலை; சரிசமம்.

  ‘ஆண்டவர் சந்நிதியில் அனைவரும் ஒன்று’
  ‘நீ வேறு அவன் வேறு என்கிற பாகுபாடு கிடையாது. எனக்கு இருவருமே ஒன்றுதான்’

 • 5

  இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கும்போது அவற்றைப் பிரித்துக்காட்டப் பயன்படுத்தும் சொல்.

  ‘ஒன்று, நீ பேசாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரியாது என்று சொல்லியிருக்க வேண்டும்’

 • 6

  (முன்னிலை, படர்க்கை ஒருமைப் பிரதிப்பெயருக்கு முன்னால்) குறிப்பிட்ட நபரை குறிப்பிட்ட சூழலில் முக்கியத்துவம் அற்றவராகக் கருதுவதைத் தெரிவிக்கும் சொல்.

  ‘நீ ஒன்று, சொன்னதையே சொல்லாதே’
  ‘அவன் ஒன்று, சொன்னாலும் கேட்கமாட்டான்’