ஒன்றும் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒன்றும்1ஒன்றும்2

ஒன்றும்1

பெயர்ச்சொல்

 • 1

  (எதிர்மறை வாக்கியத்தில்) எதுவும்.

  ‘அவனுக்கு இங்கு நடப்பது ஒன்றும் தெரியாது’

ஒன்றும் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒன்றும்1ஒன்றும்2

ஒன்றும்2

இடைச்சொல்

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி நினைத்திருப்பதை அல்லது கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மறுத்துக் கூறும்போது) ‘ஒரு விதத்திலும்’, ‘எந்த விதத்திலும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை’
  ‘நீ நினைப்பதுபோல் வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றும் தரத்தில் உயர்ந்தவை அல்ல’

 • 2

  ஒரு வாக்கியத்தில் அழுத்தம் தருவதற்காகச் சேர்க்கப்படும் இடைச்சொல்.

  ‘இங்கு நடப்பது எனக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை’