தமிழ் ஒப்படை யின் அர்த்தம்

ஒப்படை

வினைச்சொல்ஒப்படைக்க, ஒப்படைத்து

 • 1

  (தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர்) பொறுப்பில் விடுதல்.

  ‘இவனை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் அவனை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும்’
  ‘பத்திரிகையை நீதான் இனிமேல் நடத்த வேண்டும் என்று கூறி அப்பா என்னிடம் ஒப்படைத்துவிட்டார்’
  ‘பணத்தை மேலாளரிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறேன்’
  ‘கடவுளிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன்’

 • 2

  (அதிகாரத்தில் இருப்பவரிடம் அல்லது உரியவரிடம்) சேர்ப்பித்தல்.

  ‘கொள்ளைக்காரர்கள் தங்கள் ஆயுதங்களைக் காவலர் வசம் ஒப்படைத்துச் சரணடைந்தனர்’
  ‘வண்டியில் மறதியாக விட்டுவிட்டுப் போன பெட்டியை ஓட்டுநர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்’