தமிழ் ஒப்பாரி யின் அர்த்தம்

ஒப்பாரி

பெயர்ச்சொல்

  • 1

    (இழவு வீட்டில்) இறந்துபோனவரைக் குறித்த அழுகையும் (பாட்டு வடிவிலான) புலம்பலும்.

    ‘நள்ளிரவில் பக்கத்து வீட்டிலிருந்து எழுந்த ஒப்பாரிச் சத்தம் என்னைத் திடுக்கிடவைத்தது’
    உரு வழக்கு ‘மகன் தன்னைக் கவனிப்பதே இல்லை என்பது கிழவியின் ஒப்பாரி’