தமிழ் ஒப்பு யின் அர்த்தம்

ஒப்பு

வினைச்சொல்ஒப்ப, ஒப்பி

 • 1

  (ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு) இணங்குதல்.

  ‘நண்பருடைய யோசனைக்கு ஒப்பி அவருடன் புறப்பட்டேன்’
  ‘நீ செய்தது சரிதான் என்று சொல்ல ஏனோ என் மனம் ஒப்பவில்லை’

 • 2

  உயர் வழக்கு உடன்படுதல்.

  ‘இது மேலும் ஆராய்வதற்கு உரியது என்பதைப் பெரும்பாலான ஆய்வாளர்கள் ஒப்புவர்’

தமிழ் ஒப்பு யின் அர்த்தம்

ஒப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குணம், பண்பு, செயல், தரம் போன்றவற்றில்) இணை; பொருத்தம்; சமம்.

  ‘அவரை என் தந்தைக்கு ஒப்பாக மதிக்கிறேன்’
  ‘இந்தக் கோயிலின் சிற்ப வேலைக்கு ஒப்பு உவமை சொல்ல முடியாது’
  ‘இதில் பணம் போடுவது கிணற்றில் போடுவதற்கு ஒப்பாகும்’