தமிழ் ஒப்புதல் யின் அர்த்தம்

ஒப்புதல்

பெயர்ச்சொல்

 • 1

  சம்மதம்; உடன்பாடு.

  ‘கல்யாணத்துக்குத் தன் ஒப்புதலைத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறான்’

 • 2

  அதிகாரபூர்வமான இசைவு.

  ‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதாவை அரசு அனுப்பிவைத்தது’
  ‘ஐம்பது கோடி ரூபாய்க்கு அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது’

 • 3

  (ஒன்றைப் பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தரும்) எழுத்துமூலமான அறிவிப்பு.

  ‘புத்தகங்களைப் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதல் அனுப்புக’
  ‘ஒப்புதல் ரசீது’