தமிழ் ஒப்பேற்று யின் அர்த்தம்

ஒப்பேற்று

வினைச்சொல்ஒப்பேற்ற, ஒப்பேற்றி

 • 1

  (இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு) சரிக்கட்டுதல்.

  ‘மாதக் கடைசி, செலவுக்குக் கையில் இருப்பதை வைத்துக்கொண்டுதான் ஒப்பேற்ற வேண்டும்’

 • 2

  (ஓரளவாவது) தேறச்செய்தல்.

  ‘இந்தக் குறைந்த தண்ணீரை வைத்துக்கொண்டு இந்தப் பயிரை ஒப்பேற்றப்பார்க்கிறோம்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு நிறைவேற்றுதல்.

  ‘இந்தப் பாரிய பொறுப்பை எவ்வாறாயினும் ஒப்பேற்றி முடிக்க வேண்டும்’