தமிழ் ஒருக்களி யின் அர்த்தம்

ஒருக்களி

வினைச்சொல்ஒருக்களிக்க, ஒருக்களித்து

 • 1

  (படுத்திருக்கும்போது) விலாப்புறமாகச் சாய்ந்திருத்தல்.

  ‘பிறந்த குழந்தை சில மாதங்கள் கழித்து புரண்டோ ஒருக்களித்தோ படுக்கத் தொடங்கும்’
  ‘அந்தச் சிறிய திண்ணையில் ஒருவர் ஒருக்களித்துப் படுக்கும் அளவுக்கே இடம் இருந்தது’
  ‘ஒருக்களித்த நிலையில் படுத்திருந்தவனால் சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை’

 • 2

  (ஒரு பொருளை வைக்கும்போது அல்லது தூக்கும்போது) ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில் இருக்குமாறு செய்தல்.

  ‘வாசல்படி சிறியதாக இருப்பதால் அலமாரியை ஒருக்களித்துத்தான் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்’

 • 3

  (கதவை) பாதி மூடிய நிலையில் சாத்துதல்.

  ‘கதவைக் கொஞ்சம் ஒருக்களித்து வை’