தமிழ் ஒருக்கால் யின் அர்த்தம்

ஒருக்கால்

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒருவேளை.

  ‘அவர் வீட்டில் இல்லை; ஒருக்கால் ஊருக்குப் போயிருப்பாரோ?’
  ‘ஒருக்கால் நான் நாளை இங்கு வர முடியாவிட்டால் நீ அம்மாவைக் கூட்டிக்கொண்டு போகிறாயா?’

தமிழ் ஒருக்கால் யின் அர்த்தம்

ஒருக்கால்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கொஞ்சம் நேரம்; சிறிது நேரம்.

  ‘ஒருக்கால் பிள்ளையைப் பார். முகம் கழுவிவிட்டு வருகிறேன்’
  ‘ஒருக்கால் வீட்டில் நில். கடைக்குப் போய்விட்டு வருகிறேன்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒருமுறை; ஒருதரம்.

  ‘ஒருக்கால் சொன்னால் நீ கேட்கமாட்டாயா?’
  ‘அந்தப் பக்கம் போனால் அவரை ஒருக்கால் பார்த்துவிட்டு வா’
  ‘எந்த விஷயத்தையும் ஒருக்கால் சொன்னால் பிடித்துக்கொண்டுவிடுவான். அவனுக்கு அபாரமான ஞாபகசக்தி’