தமிழ் ஒருங்கிணை யின் அர்த்தம்

ஒருங்கிணை

வினைச்சொல்-இணைய, -இணைந்து, -இணைக்க, -இணைத்து

 • 1

  (தனித்தனியாக அல்லது பல பகுதிகளாக உள்ளவை முரண்பாடு இல்லாமல்) ஒன்றாக இணைதல்.

  ‘நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் திட்டம் நிறைவேறும்’
  ‘இரு துருவங்களாக இருந்தவர்கள் ஒருங்கிணைந்தனர்’

தமிழ் ஒருங்கிணை யின் அர்த்தம்

ஒருங்கிணை

வினைச்சொல்-இணைய, -இணைந்து, -இணைக்க, -இணைத்து

 • 1

  (தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல்.

  ‘வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் ஓடும் ஆறுகளை ஒருங்கிணைத்து நாட்டில் விவசாயத்தை மேலும் வளமாக்கலாம்’
  ‘சிதறிக்கிடக்கும் சங்கங்களை ஒருங்கிணைப்பதன்மூலம் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கலாம்’
  ‘கிராம முன்னேற்றம்குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை ஒருங்கிணைத்துத் தந்திருக்கிறோம்’