தமிழ் ஒருங்கே யின் அர்த்தம்

ஒருங்கே

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒரே சமயத்தில்.

  ‘இந்த உடற்பயிற்சி உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே பக்குவப்படுத்தும்’
  ‘அவளுக்குப் பயமும் பக்தியும் ஒருங்கே எழுந்தன’

 • 2

  உயர் வழக்கு ஒன்றாக.

  ‘பாம்பையும் கீரியையும் ஒருங்கே வளர்க்க முடியாது!’

 • 3

  உயர் வழக்கு மொத்தமாக; முழுமையாக.

  ‘புகழ்ச்சி வார்த்தைகளெல்லாம் அவருக்கு ஒருங்கே சலித்துப்போயின’
  ‘குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கே இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்’