தமிழ் ஒருபேச்சுக்கு யின் அர்த்தம்

ஒருபேச்சுக்கு

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (சொல் என்ற வினையுடன் வரும்போது) (உள்நோக்கமோ தீவிரமான தொனியோ இல்லாமல்) சாதாரணமாக.

  ‘ஒருபேச்சுக்கு ‘இனிமேல் வீட்டுப் பக்கமே வராதே’ என்று சொன்னதற்காக அவன் நிஜமாகவே வருவதை நிறுத்திவிட்டான்’
  ‘ஒரு பேச்சுக்கு ‘ஊருக்குப் போய்விட்டு வா’ என்று சொன்னதற்காக ஒரேயடியாக அங்கேயே தங்கி விடுவதா?’
  ‘ஒருபேச்சுக்கு ‘உங்களுக்குத்தான் உலக அழகிப் பட்டம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னதற்கு அந்த நடிகை அப்படியே உருகிப்போய்விட்டார்’

 • 2

  பேச்சு வழக்கு உண்மையாக இல்லாத அல்லது நடக்காத ஒன்றை ஒரு கற்பனைக்காக மட்டும் எடுத்துக் கொண்டு.

  ‘உங்கள் கட்சியே ஆட்சிக்கு வருகிறது என்று ஒருபேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அதனால் மக்களுக்கு என்ன பயன்?’
  ‘ஒருபேச்சுக்கு உன்னை வைத்து நான் படம் இயக்குகிறேன் என்றாலும் அந்தப் படத்தை யார் தயாரிப்பது?’

 • 3

  பேச்சு வழக்கு (ஒருவரிடம் ஒன்றைச் சொல்வதைக் குறித்து வரும்போது) சம்பிரதாயத்துக்காக.

  ‘கல்யாணத்தைப் பற்றிப் பெரியவரிடம் ஒருபேச்சுக்குச் சொல்லிவைப்போம்’