தமிழ் ஒருமை யின் அர்த்தம்

ஒருமை

பெயர்ச்சொல்

 • 1

  பல்வேறு கூறுகள் தொடர்புபடுத்தப்பட்டு அமையும் முழுமை.

  ‘இந்தக் கவிதையில் ஒருமை இல்லாததைக் காண முடிகிறது’

 • 2

  ஒருமுகப்பட்ட நிலை.

  ‘மன ஒருமை வேண்டும்’

 • 3

  (பேச்சில்) (மிக நெருக்கமானவரை மட்டும் அழைக்கப் பயன்படும்) மரியாதைக் குறிப்பு இல்லாத சொல்.

  ‘அவர்கள் இருவரும் ஒருமையில்தான் அழைத்துக்கொள்வார்கள்’
  ‘அவர் என்னை உரிமையுடன் ஒருமையில் அழைத்துப் பேசுவார்’

 • 4

  இலக்கணம்
  ஒன்று என்ற எண்ணிக்கையை உணர்த்தும் சொல்.

  ‘‘அவர்கள்’ என்பது பன்மை. அதன் ஒருமை வடிவம் என்ன?’

 • 5

  ஒரு முழுமையின் பல்வேறு கூறுகள் தங்களுக்குள் கொண்டிருக்கும் பொதுத் தன்மை.

  ‘இந்திய மக்கள் மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டிருந்தாலும் அவர்களின் பண்பாட்டில் ஒருமையைக் காண முடிகிறது’
  ‘வேற்றுமையில் ஒருமை’