தமிழ் ஒரே யின் அர்த்தம்

ஒரே

பெயரடை

 • 1

  ‘(குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைத் தவிர) வேறு இல்லை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘என்னுடைய ஒரே மகன்’
  ‘கிழவியிடம் இருந்த ஒரே பானையும் உடைந்துவிட்டது’

 • 2

  குறிப்பிட்ட அதே.

  ‘நீங்கள் இருவரும் ஒரே அச்சில் வார்த்ததுபோல் இருக்கிறீர்கள்’
  ‘ஒரே நேரத்தில் சாப்பிடத் தொடங்கினோம்’

 • 3

  (குறிப்பிட்ட ஒன்றைத் தவிர வேறு இல்லை என்னும்படி) மிகுதியான; மிக அதிகமான.

  ‘ராத்திரி முழுவதும் ஒரே இருமல்’
  ‘ஒரே இருட்டு, எதுவும் தெரியவில்லை’