தமிழ் ஒரேமூச்சில் யின் அர்த்தம்

ஒரேமூச்சில்

வினையடை

  • 1

    (ஒரு செயலை ஆரம்பித்த பின்) இடையில் நிறுத்தாமல் வேகத்துடன்.

    ‘எழுத வேண்டிய கடிதங்கள் அனைத்தையும் ஒரேமூச்சில் எழுதி முடித்தார்’
    ‘கதைப் புத்தகத்தை ஒரேமூச்சில் படித்துவிட்டுத்தான் கீழே வைத்தான்’
    ‘மருந்து கசப்பாக இருந்ததால் ஒரேமூச்சில் குடித்துவிட்டார்’