தமிழ் ஒரேயடியாக யின் அர்த்தம்

ஒரேயடியாக

வினையடை

 • 1

  (இறுதி எல்லைக்கே அல்லது வரம்புக்கே போய்விடுவதுபோல்) மிக அதிகமாக; மிகவும்.

  ‘பத்து வருடங்களுக்குள் உருவத்தில் ஒரேயடியாக மாறியிருந்தாள்’
  ‘முடியை ஒரேயடியாகக் குறைத்துவிட்டீர்களே’
  ‘இப்படி ஒரேயடியாகப் பொய் சொன்னால் என்ன செய்வது?’

 • 2

  (இன்னொரு முறை என்று இல்லாமல்) ஒரே தடவையாக; முழுதாக.

  ‘மாட்டை அடித்துச் சித்திரவதை செய்வதைவிட ஒரேயடியாகக் கொன்றுவிடலாம்’
  ‘ஒரேயடியாக இந்த வேலையையும் முடித்து விடு!’

 • 3

  முற்றிலும்.

  ‘பணம் வாங்கிக்கொள்ள ஒரேயடியாக மறுத்துவிட்டார்’