தமிழ் ஒற்றை யின் அர்த்தம்

ஒற்றை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இரட்டையில்) ஒன்று.

  ‘ஒற்றைச் செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது?’
  ‘ஒற்றைக் கொம்பு யானை’

 • 2

  தனி.

  ‘ஒற்றை ஆளாக நின்று அனைவரையும் சமாளித்தான்’
  ‘ஒற்றை விரலால் அதை ஒருபுறமாக ஒதுக்கினான்’
  ‘ஒற்றையாக வாழ்வது கஷ்டம்’
  ‘ஒற்றையான ஆள்’

தமிழ் ஒற்றை யின் அர்த்தம்

ஒற்றை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (புத்தகம், நோட்டு போன்றவற்றின்) பக்கம்.

  ‘நாற்பது ஒற்றை உள்ள கொப்பி ஒன்று வாங்கிக்கொண்டு வா’