தமிழ் ஒற்றைச்சாளர முறை யின் அர்த்தம்

ஒற்றைச்சாளர முறை

பெயர்ச்சொல்

  • 1

    (மாணவர் சேர்க்கை, பணியிட மாற்றம், தொழில் துவங்க அனுமதி போன்றவை தொடர்பான) அனைத்துப் பணிகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் முடிவுசெய்வதற்கான ஏற்பாடு.

    ‘மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறைப்படி மாணவர்கள் சேர்க்கப்படுவர்’
    ‘தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் குறித்த உத்தரவுகள் இந்த ஆண்டு ஒற்றைச்சாளர முறையின் மூலம் வழங்கப்படும்’
    ‘ஒற்றைச்சாளர முறையில் அனைத்து ஒப்புதல்களையும் தொழில் முனைவோர் எளிதாகப் பெற முடியும்’