தமிழ் ஒற்றுமை யின் அர்த்தம்

ஒற்றுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பலர் இணைந்து) ஒன்றாக இருக்கும் நிலை; (பல பகுதிகள் இணைந்த) முழுமை.

  ‘தொழிலாளர் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்’
  ‘நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கச் சில சக்திகள் முயல்கின்றன’

 • 2

  (கொள்கை, ஈடுபாடு முதலியன ஒத்துவருவதால் ஏற்படும்) நேசமான கூட்டு.

  ‘ஒற்றுமையாக இருந்தீர்கள்; ஏன் பிரிந்துவிட்டீர்கள்?’

 • 3

  ஒத்த தன்மை.

  ‘உருவ ஒற்றுமை’
  ‘இலக்கியத்தையும் மொழியியலையும் கற்பிக்கும் முறைகளில் சில ஒற்றுமைகள் உண்டு’