ஒலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒலி1ஒலி2

ஒலி1

வினைச்சொல்ஒலிக்க, ஒலித்து

 • 1

  ஓசை எழுப்புதல்.

  ‘மெட்டி ஒலிக்க அவள் நடந்து வந்தாள்’
  ‘வகுப்பு முடிவதற்கு அறிகுறியாக மணி ஒலித்தது’
  ‘நாகசுரம் இனிமையாக ஒலித்தது’

 • 2

  (பாடல், இசை முதலியன) கேட்டல்.

  ‘பறையும் தம்பட்டமும் அடிப்பது அவன் காதில் ஒலித்தது’
  ‘பின்னணியில் இசை ஒலிக்க ஆரம்பித்தது’

 • 3

  (எழுத்தையோ சொல்லையோ அதற்கு உரிய) ஓசை முறைப்படி வெளிப்படுத்துதல்; உச்சரித்தல்.

  ‘அவர் ளகரத்தை லகரமாக ஒலித்தது எரிச்சலூட்டியது’

 • 4

  (ஒன்றில் ஒரு குறிப்பிட்ட தன்மை) வெளிப்படுதல்.

  ‘எனது எல்லா நாவல்களிலும் ஆன்மீகம் கொஞ்சம் மேலோங்கியே ஒலிக்கும்’

 • 5

  செல்வாக்கு வெளிப்படுதல்.

  ‘உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்’
  ‘இலக்கிய விமர்சகர்கள் பலர் இருந்தாலும் அவருடைய குரல் மட்டும் தனித்து ஒலிக்கும்’

ஒலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒலி1ஒலி2

ஒலி2

பெயர்ச்சொல்

 • 1

  காதால் கேட்டு உணரக்கூடியது; சத்தம்.

  ‘ஒலி இல்லை என்றால் எதிரொலியும் இல்லை’
  ‘வளையல் ஒலியிலிருந்து பாத்திரம் கழுவுகிறாள் என்பது தெரிந்தது’
  ‘வீணையின் ஒலி’
  ‘சில மொழிகளுக்குச் சில சிறப்பு ஒலிகள் உண்டு’