ஒளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒளி1ஒளி2ஒளி3

ஒளி1

வினைச்சொல்ஒளிய, ஒளிந்து, ஒளிக்க, ஒளித்து

 • 1

  (ஒருவர் பிறர்) கண்ணில் படாதவாறு இருத்தல்; மறைதல்.

  ‘குழந்தை பாம்பாட்டியைக் கண்டதும் தாயின் பின்னால் ஒளிந்துகொண்டது’
  ‘நாம் ஒளிந்து விளையாடுவோமா?’
  உரு வழக்கு ‘அவருடைய கூற்றில் ஓர் உண்மை ஒளிந்திருக்கிறது’
  உரு வழக்கு ‘உன்னிடம் ஒளிந்திருக்கும் சக்தி உனக்குத் தெரியாது’

ஒளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒளி1ஒளி2ஒளி3

ஒளி2

வினைச்சொல்ஒளிய, ஒளிந்து, ஒளிக்க, ஒளித்து

 • 1

  மறைவான இடத்தில் இருக்கச்செய்தல்; (பார்வை படாத இடத்தில்) மறைத்தல்.

  ‘‘என் பந்தை எங்கே ஒளித்துவைத்தாய்?’ என்று தம்பி கேட்டான்’

 • 2

  (தெரியப்படுத்தாமல்) மறைத்தல்.

  ‘அம்மாவிடம் மகள் ஒளிக்கக்கூடிய செய்தி எதுவும் இல்லை’
  ‘நடந்ததை ஒளிக்காமல் சொல்!’

ஒளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒளி1ஒளி2ஒளி3

ஒளி3

பெயர்ச்சொல்

 • 1

  சூரியன், சந்திரன், நெருப்பு முதலியவற்றிலிருந்து வெளிப்படுவது; பொருள்களின் மீது பட்டுப் பொருள்கள் இருப்பது தெரியக் காரணமாக இருப்பது.

  ‘சூரிய ஒளி’
  ‘விளக்கின் ஒளி’
  ‘அறைக்குள் ஒளி குறைவாக இருந்தது’
  உரு வழக்கு ‘கண்களில் அறிவின் ஒளி’

 • 2

  (ஒன்றில் அல்லது ஒருவரிடம்) இயல்பாக வெளிப்படும் பிரகாசம்.

  ‘அவன் கண்களின் ஒளி என்னைக் கவர்ந்தது’
  ‘உன் முகத்தில் பழைய ஒளி இல்லையே’
  ‘கட்டடத்தின் ஒளி மங்கிப்போய்விட்டது’